Editorial / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்கு எல்லாமே தெரியும் என வீம்புடன், வீராப்பாகப் பேசுபவர்களின் பேச்சுகளை நம்பினால், அதை நம்புகின்றவர்கள் பெரும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஆராயாமல் எதையும் நம்பி விடக்கூடாது.
இதைவிடத் தெரியாத நபர்களால், பெரிய ஆபத்துகள் நேரிடாது. இவரிடம் சந்தேகங்களைக் கேட்கவும் முடியாது எனப் புரிந்து கொள்வார்கள்.
அதிகம் தெரிந்தவன், மௌனமாக இருக்கிறான். எனினும் இத்தகையவர்களுடன் முறையாக அணுகினால், சரியான தகவல்களைப் பெறும் சந்தர்ப்பம் உருவாகும். ஒன்றுமே தெரியாமல் வாழ்வதுகூட, மிகச் சிரமமானதுதான்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் வாழ்வது, நல்லதல்ல. உலக விவகாரங்களை மட்டுமல்ல, சமூக அக்கறையுடன் பல விடயங்களைக் கற்கவும் வேண்டும். மாறிவரும் உலகில், இன்னமும் எங்களைப் புதுப்பிக்காமல் இருக்க முடியாது. “தெரியாது” எனச் சொல்லித் தப்பிக்க முயல்வதும் தப்பு.
வாழ்வியல் தரிசனம் 09/10/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .