2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

’பின்னவல சரணாலயம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அமைந்துள்ள அனாதை யானைகளைப் பராமரிக்கும் ஒரு சரணாலயம் இதுவாகும். இங்கு சுமார் அறுபதற்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளில் பெரும்பாலானவை தாயினால் கைவிடப்பட்ட குட்டிகள் அல்லது அனாதையாக்கப்பட்ட குட்டிகளாகும்.

1975 இல் சுமார் 25 ஏக்கர் தென்னம் தோப்பு காணியில் மகா ஓயாவை ஒட்டி இந்தப் சரணாலய​ம் அமைக்கப்பட்டது. அந்த நாட்களில், முதன்மையாக இங்கு தாய் கொலை செய்யப்பட்ட யானைகள் அல்லது குழியினுள் அகப்பட்டு, தாய் இறந்தபின் அனாதையான யானைகள் என்பன பராமரிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் வில்பத்து பிரதேசத்திலுள்ள தேசிய பூங்காவில் இந்த அனாதை யானைகள் சரணாலயம் இருந்தாலும், பின்னாளில் பெந்தோட்டைப் பிரதேசத்தில் இந்த அனாதை யானைகளின் மடம் அமைக்கப்பட்டது.

ஆயினும், மீளவும் தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு இந்த சரணாலயம் மாற்றப்பட்டது. தெஹிவளை விலங்கியல் பூங்காவில் இருந்து இறுதியாக பின்னவல எனும் இடத்திற்கு இந்த சரணாலயம் மாற்றப்பட்டது. இந்த சரணாலயத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த சரணாலம் நிர்வகிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .