2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

ஜப்பான் மொழி பேச்சுப் போட்டியில் இலங்கை யுவதி முதலிடம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் உள்ள நியோன்சாய் டஹியகு பல்கலைக்கழகத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜப்பான் மொழி பேச்சுப் ​போட்டியில் இலங்கை யுவதி ஒருவர் இம்முறை முதலிடம் பிடித்துள்ளார்.

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 1800 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு 25 வயதான விமுக்தி மாதவி எஹல்பொல முதலிடம் பிடித்துள்ளார்.

ராகமவைச் சேர்ந்த  இவர் கம்பஹா யசோதரா மகளிர் கல்லூரியில் கல்வி கற்றதுடன், களனி பல்கலைக்கழகத்தில் மனித வள மேம்பாட்டு துறையில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்துள்ளார்.

கடந்த 2 வருடமாக ஜப்பானின் பல்கலைக்கழகத்தில் கிரபிக் மற்றும் அனிமேஷன் தொழிநுட்ப பட்டப்படிப்பினைத் தொடர்ந்தவாரே குறித்த போட்டியில் பங்குப்பற்றியிருந்தார்.

ஜப்பான் மொழி பேச்சுப்போட்டியில் இலங்கையர் ஒருவர் முதலிடம் பிடித்தது இதுவே முதற்தடவையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .