2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

வசந்த காலத்தில், வாருங்கள் நுவரெலியாவுக்குச் செல்வோம்!

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரைப் புத்தாண்டு, பாடசாலை விடுமுறை, அலுவலக விடுமுறை என, இலங்கை வாழ் மக்கள், சந்தோசமாக வரவேற்கும் வசந்தகால விடுமுறையை அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்தத் தருணத்தில், பலரும் சுற்றுலாக்களை மேற்கொண்டு, இந்த வசந்த காலத்தைக் கொண்டாடத் திட்டமிட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இம்முறை எங்கு செல்லலாமென்ற யோசனையில் ஆழ்ந்திருப்பீர்கள். அதற்கு எம்மிடமுள்ள ஒரே பதில்... நுவரெலியா தான்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில், வெப்பத்தால் வாடியுள்ள நீங்கள், இம்முறை சுற்றுலாவை நுவரெலியாவுக்கு மேற்கொண்டால், உங்கள் உடலுக்கு மாத்திரமன்றி, உள்ளத்துக்கும் அது குளிர்ச்சியைத் தரும்.

அத்துடன், சுற்றுலாவுக்காக பாரிய தொகையைச் செலவிடக் காத்திருக்கும் உங்களுக்கு, செலவுக்கேற்ற திருப்தியைக் கொடுக்கவல்ல பல்வேறு இடங்களையும், இந்த மாவட்டத்துக்குள்ளே​யே கண்டுகளிக்கலாம்.

அந்த வகையில், கிரெகரி வாவி, சீதையம்மன் கோவில், Moon plains, போம்புர வாவி, ஹக்கல தாவரவியல் பூங்கா, Single Tree Hill, கெல்வெஸ்லேண்ட் தேசியப் பூங்கா, விக்டோரியா தாவரவியல் பூங்கா, விக்டோரியா அரும்பொருட் காட்சியகம், க்ளேன் நீர்வீழ்ச்சி, தம்ரோ டீ (Macwoods), St. Xavier’s church, அம்பேவல பால் உற்பத்தி நிலையம், ஹோர்ட்டன் சமவெளி, St. Clair Falls ஆகியவற்றைப் பார்வையிடலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .