2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

இரத்ததான முகாமில் சாதனை: 53,129 பேர் கலந்துகொண்டனர்

Kogilavani   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியா, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமில் 53,129 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் இரத்ததான முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த இரத்ததான முகாமினை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்படி, கடந்த 14ஆம் திகதி சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கின்னஸ் சாதனைக்கான இரத்ததான முகாம்கள் நடைபெற்றன.

இந்த இரத்ததான முகாமில் 53,129 பேர் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினர்.

இதற்கு முன்பு, 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் 43,732 பேர்; கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியதே கின்னஸ் உலக சாதனையாக கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது, அந்த சாதனையை முறியடித்து,

இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில், கின்னஸ் அமைப்பு பிரதிநிதி லுசியா சந்தித்து, கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .