2022 ஜூலை 07, வியாழக்கிழமை

100 வயதைக் கடந்த வத்சலா

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரணாயலத்தில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் பெண் யானையொன்று, 100 வயதைத் தாண்டி சாதனை படைத்து  உள்ளது. இதையடுத்து, அந்த யானைக்கு கின்னஸ் சாதனை பெற, அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

பொதுவாக யானையின்  ஆயுட்காலம், அதிகபட்சமாக 90 ஆண்டுகள் வரை  மட்டுமே. ஆனால், இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை ஒன்று, 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

வத்சலா என்று அழகான பெயரில் அழைக்கப்படும் அந்த யானை தான், ஏற்கெனவே மற்ற யானைகளால் தாக்கப்பட்டு மரணிக்கும் நிலைவரை போனது. ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக, மீண்டும் உயிர்ப்பெற்று, தற்போது நலமாக உள்ளது. தற்போதைய நிலையில், உலகில் அதிக வயதுடைய யானையாக வத்சலா கருதப்படுகிறது.

எனவே, அந்தப் பெண் யானைக்கு, கின்னஸ் அங்கிகாரம் பெறும் முயற்சியில், சரணாலய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த யானையின் பிறப்பிடம், கேரள மாநிலம் நீலாம்பூர் வனச்சரங்கம் என்று கூறப்படுகிறது. அங்கிருந்து, ஹோசாங்காபாத் சராணாலயத்துக்கு,கடந்த 1972ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வட்சலா, தொடர்ந்து 1972ஆம் ஆண்டு, பன்னா புலிகள் சரணாலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

பன்னாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, வெகுவாகக் கவர்ந்திழுத்துள்ள இந்தப் பெண் யானையின் பிறப்பிடம் குறித்த சான்றிதழ் பெற, அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அது கிடைத்ததும், அந்தச் சான்றிதழை கின்னஸ் சாதனை நிறுவனத்திடம் சமர்ப்பித்து, அதிக வயதுடைய யானை என்ற காரணத்துக்காக கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வாங்கப்படும் என்று, பன்னா சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .