2022 ஜனவரி 22, சனிக்கிழமை

களுத்துறை 'த சான்ட்ஸ்' ஹோட்டல்

Super User   / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


 • றிப்தி அலி
உழைத்து களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு முக்கியமானதாகும். அந்த ஓய்வு எங்கு கிடைக்கும் என ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அமைதியாகவும் அழகாகவும் உள்ள இடங்களையே நாடுவர். அப்படியான ஒர் இடத்திலேயே 'த சான்ட்ஸ்' ஹோட்டல் அமைந்துள்ளது. விடுமுறையை கழிக்க வருபவர்களுக்கு ஒரு நவீன வடிவமைப்பில் மகிழ்ச்சிகரமாக பிரமிப்பூட்டும் அனுபவத்தை இந்த ஹோட்டல் அறிமுகம் செய்கின்றது.

களுத்துறை ரமடா ரிசோட் என பிரபல்யம் பெற்ற இந்த ஹோட்டல் நான்கு நட்சத்திர அந்தஸ்தினை பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே 'த சான்ட்ஸ்' என பெயர் மாற்றப்பட்ட இந்த ஹோட்டலை இலங்கையின் முன்னணி ஹோட்டல் கம்பனியான எயிற்கென் ஸ்பேன்ஸ் ஹோட்டல்ஸ் நிறுவத்தினால் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து சுமார் 37 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள களுத்துறை நகரத்திற்கு அண்மையிலுள்ள வஸ்கடுவ எனும் பிரதேசத்திலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. காலி வீதியிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கடற்கரைக்கு அருகில் சுமார் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைய பெற்றுள்ளது.

சுமார் 15 நிமிடங்களில் களுத்துறை நகரை அடைய கூடிய இடத்திலுள்ள த சான்ட்ஸிற்கு அருகாமையில் விகாரை, தேவாலயம், பள்ளிவாசல், பொது சந்தை மற்றும் பஸ் தரிப்பு நிலையம் ஆகியன காணப்படுகின்றன.   இந்த ஹோட்டலிலுள்ள ஊழியர்கள் ஆங்கிலம், சிங்களம் மற்றும் ஜேர்மனி ஆகிய மொழிகளில் சரளமாக உரையாற்றுபவர்களாக காணப்படுகின்றனர்.

அத்துடன் நவீன ரக தங்கும் அறைகள், ஓய்வெடுக்கும் அறை, 24 மணி நேர அறை சேவை, வை-பை சேவை, வாகனங்கள் தரிப்பிடம், சோனா, ஸ்டிம் பாத்,  லைவ் மியூசிக், நகை கடை, நீச்சல் தடாகம், சிறுவர் நீச்சல் தடாகம், சிறுவர் உணவுகள்,  உடற் பயிற்சி நிலையம் மற்றும் கடல் குளியல் உள்ளிட்ட பல வசதிகள் விருந்தினர்களுக்கு தேவையான வகையில் இந்த ஹோட்டலில் உள்ளன.

இதேவேளை, சுமார் 109 அறைகளை கொண்ட இந்த ஹோட்டலில் ஸ்டேன்டட், கபானாஸ், குடும்ப அறை, டியூலக்ஸ் மற்றும் லக்ஸரி சூட் ஆகிய வகையான விடுதி அறைகள் உள்ளன.

இதில் தனி ஒருவர், இருவர், மூவர் என தங்க கூடிய வகையில் அமைய பெற்ற 61 ஸ்டேன்ரட் அறைகளை கொண்டுள்ளது. இருவர் மாத்திரம் தங்கக்கூடிய வகையில் கபானாஸ் எனும் 30 அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த கபானாஸ் எனப்படும் அறைகள் புதிய தம்பதியினரின் தேன் நிலவினை கழிப்பதற்கு ஏற்ற வகையிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதற்கு மேலதிகமாக நான்கு பேர் தங்கக்கூடிய மூன்று அறைகள் உள்ளன. இரண்டு பேர் தங்கக்கூடிய வகையிலான டியூலக்ஸ் எனும் 14 அறைகள் உள்ளன.  அத்துடன் மூன்று பேர் தங்கக்கூடிய லக்ஸரி சூட் எனும் ஓர் அறை உள்ளது. ஹோட்டலிலுள்ள ஏனைய அறைகளை விட நவீன முறையில் பல முக்கிய வசதிகளுடன் லக்ஸரி சூட் அறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வானொலி, எல்.சீ.டி. தொலைக்காட்சி, பாதுகாப்பு பெட்டி, ஒரு நாளைக்கு இரண்டு நேர துப்புரவாக்கல் சேவை, சோபா மெத்தை, வேண்டுகோள் விடுத்தால் தினசரி பத்திரிகை உள்ளிட்ட பல வசதிகளை அறைகளில் தங்கும் விருந்தினர்களுக்கு ஏற்ற வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றிற்கு மேலதிகமாக டென்னிஸ், பட்மின்டன், மேசைப்பந்து, வலைப்பந்து, கரம், ஜிம் ஆகிய விளையாட்டு வசதிகளும் இந்த ஹோட்டலில் உள்ளன. அத்துடன் கடலை அண்டிய பிரதேசத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கின்றமையினால் கடல் சார்ந்த பெயர்களான த யாட், வேவ்ஸ், ஷெல்ஸ், கோறல்ஸ், ஹோரல்ஸ் மற்றும் சாண்ட்ஸ் ஆகிய பெயர்களில் உணவு விடுதிகள் அமையப்பெற்றுள்ளன.

விருந்தினருக்கு தேவையான அனைத்து வகையான உணவுகளையும் 24 மணித்தியாலங்களும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஹோட்டலில் பிரதான மூன்று உணவகங்கள் மூன்று திசைகளில் காணப்படுகின்றன. இதன் காரணமாக விருந்தினர்கள் விரும்புகின்ற உணவுகளை விரும்பிய இடத்தில் தெரிவு செய்ய முடியும்.

சுமார் 350 பேர் இருக்கும் அளவிற்கு திருமண உள்ளிட்ட பொது நிகழ்வுகளை நடத்துவதற்காக பன்குயிற்றும் உள்ளது. அத்துடன் ஒரு சமயத்தில் இரண்டு திருமண நிகழ்வுகளையும் நடத்த கூடிய வகையிலான வசதிகளையும் இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

அத்துடன் கூமார் 20 பேர் கலந்துகொள்ள கூடிய வகையிலான சிறிய மாநாட்டு மண்டபமும் உள்ளது. விருத்தினர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் இந்த அறையில் மாற்றியமைக்கப்படும். அத்துடன், விருந்தினர்களிற்கு ஏற்ற வகையில் விசேட வகையான நாட் பொதிகளையும் 'த சான்ட்ஸ்' ஹோட்டல் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது காலை உணவுடன் நீச்சல் தடாக வசதி, இரவு நேர தங்குமிடத்துடன் காலை உணவு மற்றும் நீச்சல் தடாக வசதி, புஃல் போர்ட் எனப்படும் காலை மதியம், இரவு ஆகிய நேர உணவுகளுடன் நீச்சல் தடாக வசதி மற்றும் காஃப் போர்ட் எனப்படும் பகல் மற்றும் இரவு உணவுகளுடன் நீச்சல் தடாக வசதி உள்ளிட்ட பல பொதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அனைத்து வகையான பொதிகளும் விருந்தினரின் வசதிக்கு ஏற்ற வகையில் மிக குறைந்த கட்டணத்திலான ஒருநாள் பொதிகளாகும். பொது முகாமையாளரான நிரான் ரத்வத்தையினை தலைமையிலான த சான்ட்ஸ் ஹோட்டலிலுள்ள ஊழியர்கள் - விருத்தினர்களை மிக்க சிறந்த முறையில் வரவேற்கின்றனர்.

வருட இறுதி பருவகாலம் ஆரம்பிக்கும் இத்தருணத்தில் இப்பொழுதே இவ்விடத்தினை நீங்கள் தெரிவுசெய்து கொண்டால் வருட இறுதியினை மகிழ்ச்சியாக கழிக்க முடியும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 0094 0342228484 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் gm.thesands@aitkenspence என்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.  Comments - 0

 • Nifraas Wednesday, 03 October 2012 04:46 PM

  தென் மேல் இலங்கையில் இப்படியொரு பிரசித்தம் பெற்ற உல்லாச விடுதி காணப்படுவது மிகப் பெரும் வரப்பிரசாதம் எனலாம். இங்கு ஓர் இரவை கழித்தவன் என்ற வகையில், இவ்விடத்தின் பெருமையினை சொல்லால் வர்ணிப்பதை விட நேரில் சென்று அனுபவித்தால் உணரலாம் என நினைக்கின்றேன்.

  Reply : 0       0

  Mohamed Imthiyas Thursday, 04 October 2012 09:58 PM

  நானும் சென்று ஓர் இரவை அனுபவித் உணரலாம் என நினைக்கின்றேன்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X