2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுபாஸ் ஹோட்டல்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ரூபன்)


யாழ்ப்பாணத்தின் விக்டோரியா வீதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சுபாஸ் ஹோட்டல், கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து 17 வருடங்களாக இயங்காது உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் இராணுவத்தினரால் பாவனைப்படுத்தப்பட்டு வந்தது.

இராணுவத்தினர் விடுதியினை பயன்படுத்தி வந்தமைக்கு இலங்கை அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வாடகை வழங்கப்பட்டிருந்தது. 2011ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் விடுதியினை உரிமையாளரிடம் மீளவும் கையளித்த நிலையில் சுபாஸ் ஹோட்டல் கடந்த டிசெம்பர் 14ஆம் திகதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா விடுதி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது யாழ்ப்பாண சுற்றுலாத்துறைக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைகிறது. யாழ்ப்பாணத்தில் - இலங்கை உல்லாசப் பயணத்துறையினர் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முதல் சுற்றுலாவிடுதி என்ற பெருமையையும் சுபாஸ் ஹோட்டல் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்விடுதியில் குடும்ப அறைகள் உள்ளடங்கலாக 12 அறைகளும், சகல வசதிகளும் இருக்கின்றமை சிறப்பானதாகும்.

சிறந்த சமையல் கலைஞர்களால் அனைத்து வகையான உணவுகளும் உடன் தயாரித்துப் பரிமாறப்படுவதுடன் யாழில் உள்ள சுற்றுலாப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதற்கான போக்குவரத்தினையும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் விக்டோரியா வீதியில் அமைந்துள்ள சுபாஸ் ஹோட்டலுடன் 021 2224923 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
  Comments - 0

 • E.F.R.Jeyakumar Monday, 07 January 2013 04:05 AM

  அச்சா

  Reply : 0       0

  kasthuri Monday, 07 January 2013 09:40 AM

  யாழ்ப்பாண சுற்றுலாத்துறைக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைகிறது. நல்லது

  Reply : 0       0

  sam Monday, 07 January 2013 09:04 PM

  நல்லம்

  Reply : 0       0

  sam Monday, 07 January 2013 09:05 PM

  இலங்கை உல்லாசப் பயணத்துறையினர் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முதல் சுற்றுலாவிடுதி

  Reply : 0       0

  jeevan Tuesday, 08 January 2013 09:26 AM

  கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு

  Reply : 0       0

  kaja Tuesday, 08 January 2013 07:57 PM

  பெருமை பட வேண்டிய விசயம்

  Reply : 0       0

  Azhar Friday, 25 January 2013 03:41 PM

  சந்தோசம்

  Reply : 0       0

  aj Sunday, 27 January 2013 03:36 PM

  தமிழ் இன அழிப்பை சுற்றுலா துறை என்ற பெயரில் இந்த அரசும் பேரினவாதமும் செய்துகொண்டு இருக்க. இது தெரியாமல் பாராட்டு மழை பெய்யும் சில தமிழர்களை நினைக்க கவலையாக இருக்கிறது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .