2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

குமிழி உடைப்பில் புதிய சாதனை

Kogilavani   / 2013 ஜனவரி 30 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

குமிழி உடைப்பில் புதிய உலக சாதனையொன்று அமெரிக்காவில் நிலைநாட்டப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பாளர்களான மார்க் சாவென்ஸ் மற்றும் அல் பீல்டிங் ஆகியோரால் கடந்த 1960 ஆம் ஆண்டு நிவ் ஜேர்ஸி, ஹாவ்தோர்னில் வைத்து குமிழி உடைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுவாக நீர்வணங்கள் காணப்படும் பெட்டிகள் மற்றும் பல பொருட்களில் நீளமான பொலிதீன்களில் குமிழிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இவற்றை கைகளினால் உடைக்கும் போது பெரிய வெடிப்பு சத்தம் கேட்கும்.

இந்நிலையில் அமெரிக்காவின் ஹாவ்தோனர் உயர் பாடசாலையில் கல்வி கற்கும் 336 மாணவர்கள் இணைந்து 2 நிமிடத்தில் 8,000 சதுரஅடியில் வடிவமைக்கப்பட்டிருந்து நீர்குமிழிகளை இரண்டு நிமிடத்தில் உடைத்து புதிய சாதனைiயை நிலைநாட்டியுள்ளனர்.

'குமிழி உறை பாராட்டு நாள் நிகழ்வு' என்ற பெயரில் 13 ஆவது ஆண்டாக இப்பாடசாலையில் நடைபெறும் நிகழ்விலேயே இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வினூடாக பெறப்பட்ட நிதித்தொகையானது ஆரம்பப் பாடசாலையொன்றில் கடந்த டிசெம்பர் மாதம் சுட்டுகொல்லப்பட்ட 20 மாணவர்களுக்காக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடீயோ இணைப்பு  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .