2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

மனங்கவர் 'ஷிலவ் சிட்டி' ஹோட்டல்

Super User   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு – புத்தளம் பிரதான வீதி மற்றும் குருநாகல் - புத்தளம் பிரதான வீதி ஆகியவற்றின் மத்தியிலேயே சிலாபம் நகரம் அமைந்துள்ளது. மீன்பிடி, இறால் வளர்ப்பு, கிறிஸ்தவ தேவலாயங்கள் மற்றும் முன்னேஸ்வரம் கோயில் உட்பட பல முக்கிய இடங்களுக்காக பிரபல்யம் பெற்ற நகரமாகவே சிலாபம் காணப்படுகின்றது.

அது மாத்திரமல்ல புத்தளம் மாவட்டத்தின் மத்திய பிரதேசமாகவும் இந்த நகரே காணப்படுகின்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிலாபத்தை மத்திய நகராக அல்லது இடமாற்றல் நகராக பயன்படுத்துக்கின்றனர். இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட சிலாபம் நகரிற்கு விஜயம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஹோட்டல்கள் முக்கியமல்லவா? அவ்வாறான ஓர் இடமே "ஷிலவ் சிட்டி ஹோட்டல்".

கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டல், கடற்கரை மற்றும் டச் கால்வாய் ஆகியவற்றிக்கு மத்தியிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரபல்யம் பெற்ற முன்னேஸ்வரம் கோயிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்திலும் சிலாபம் நகரிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும் இந்த ஹோட்டல் அமையப்பெற்றுள்ளது.

சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ள இந்த ஹோட்டலில் சுமார் 26 அறைகள் உள்ளன. இந்த அறைகளில் குளீருட்டி, செய்மதி இணைப்பு அடங்கிய தொலைக்காட்சி, சுடுநீர் மற்றும் குளிர்நீர் வசதி ஆகிய வசதிகளை கொண்டுள்ளன.
தற்போது 28 அறைகள் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் 10 சுயிட் அறைகளாகும். இந்த சுயிட் அறைகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வழங்கப்பட்டுள்ள வசதிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக நீச்சல் தடாகம், சிறுவர் நீச்சல் தடாகம், இரண்டு பென்குயிட் மண்டபங்கள், வை.பை வசதிகளைக் கொண்ட கலந்துரையாடல் மண்டபம் ஆகியன அடங்குகின்றன. இந்த இரண்டு பென்குயிட் மண்டபங்களில் சுமார் 800 பேரும் கூட்ட மண்டபத்தில் சுமார் 80 பேரும் அமர முடியும். இவற்றில் திருமணம், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வரவேற்பு நிகழ்வுகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் செயலமர்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தக்கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த ஹோட்டலிற்கு அதிகமாக வடக்கு, கிழக்கு, மேல், தென் மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களை சேர்ந்தவர்கள் வருகை தருவது வழமையாகும். இவர்கள் இந்த ஹோட்டலில் தங்கிச் செல்லும் நிலையமாகவும் ஒய்வுகளை கழிப்பதற்கான இடமாகவும் பயன்படுத்துகின்றனர்.அதாவது தெற்கிலிருந்து வடக்கிற்கும் வடக்கிலிருந்து தெற்கிற்கும் சுற்றுலாக்களை மேற்கொள்பவர்கள் தங்கி செல்லும் இடமாக பயன்படுத்துகின்றனர். அத்துடன் ஓய்வினை கழிப்பதற்காக வருகின்றவர்களும் இந்த ஹோட்டலை பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால் இந்த ஹோட்டலினால் மேற்கொள்ளப்படுகின்ற புறா தீவு, தெதுரு ஓயா படகு சவாரி, இறால் பண்ணை, வில்பத்து தேசிய சரணாலயம், புகழ்பெற்ற சிலாபம் அனீஸ் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் முன்னேஸ்வர கோயில் விஜயம் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றமையேயாகும்.


இதற்கு மேலதிகமாக கற்பிட்டி கடலில் திமிங்கில பார்வை போன்ற பல சேவைகளையும் இந்த ஹோட்டல் வழங்குகின்றது. இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த ஹோட்டல், உல்லாசப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் 24 மணி நேரமும் வழங்கி வருகின்றது.

அத்துடன் விசேட தினசரி பெக்கேஜ்கள் மிகக் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் காலைநேர தேநீர், பகல் உணவு, மாலை நேர தேநீர் மற்றும் நீச்சல் தடாக வசதி ஆகியவற்றை கொண்டுள்ளன. ஊடகவியலாளர்கள், சந்தைப்படுத்தல் முகாமையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை புரிவோருக்கு 30 சதவீத விசேட கழிவு இந்த ஹோட்டலில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட வசதிகளை கொண்ட இந்த ஹோட்டலின் உரிமையாளரான சிலாபம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் செல்டன் பெர்ணான்டோவின் வழிகாட்டலில் முகாமையாளர் டொனால்ட் குட்பிரிட் தலைமையிலான ஊழியர்கள் - விருத்தினர்களை மிக்க சிறந்த முறையில் வரவேற்கின்றனர்.

புதுவருட விடுமுறை ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் இப்பொழுதே இந்த ஹோட்டலை நீங்கள் தெரிவுசெய்து கொண்டால் புதுவருட விடுமுறையினை மகிழ்ச்சியாக கழிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  எனவே 0094322224000/1 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் chilawchityhotel@yahoo.com என்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக தொடர்புகொண்டு உங்கள் பதிவுகளை இன்றே மேற்கொள்ள முடியும்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X