2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

உலகிலே மிகப்பெரிய முயல் வடிவம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈஸ்டர் பண்டிகையையொட்டி சொக்லேட்டினால் உலகிலே மிகப் பெரிய முயல் வடிவமொன்று பிரேசிலில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3,856 கிலோகிராம் நிறைகொண்டதாக தயாரிக்கப்பட்ட இம்முயலானது 4.1 மீற்றர் உயரமும் 1.9மீற்றர் அகலமும் கொண்டதாக காணப்படுகிறது.  

இதனை தயாரிப்பதற்காக 6000 சொக்லேட் கட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 9 கட்டுமான பணியாளர்கள் இணைந்து 5 நாட்களில் இந்த முயலை உருவாக்கியுள்ளனர்.

பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கிரமடா சுற்று வட்டாரத்தில் வருடாந்தோறும் ஒவ்வொரு ஈஸ்டர் பண்டிகைக்கும் சொகோ பெஸ்ட் என்ற வைபவம் நடைபெறுகின்றது.

இவ்வைபமானது பெருந்திரளான சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடத்தப்படுகிறது. இதேவேளை, இந்நிகழ்வில் ஒவ்வொரு குடும்பங்களும் தமது பிள்ளைகளுடன்  பங்குகொள்கின்றனர். இவ்வைபவத்தில் கலந்துகொள்வதற்காகவே சிசென் ஆர் எஸ் என்ற நிறுவனம் இந்த முயலை உருவாக்கியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் தயாரிக்கப்பட்ட 3,010 கிலோகிராம் நிறைகொண்ட முயல் குட்டியின் சாதனையை பிரேஸில் தயாரிக்கப்பட்ட இந்த முயல் வடிவம் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .