2022 ஜூலை 02, சனிக்கிழமை

சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸுக்கு சீருடை

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதின் மூத்த விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தினரின் வேண்டுகோளின் பேரில் சம்மாந்துறை ஈ.சி.எம். நிறுவன முகாமைத்துவ பணிப்பாளரும், நாபீர் பௌண்டஷன் தவிசாளருமான பொறியியலாளர் கலாநிதி உதுமானக்கண்டு நாபிரினால் கழக சீருடை தொகுதியொன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

சம்மாந்துறை ஈ.சி.எம். நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 42ஆவது ஆண்டை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்ட பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் கழகச் சீருடையை அக்கழகத்தின் தலைவர் டீ.கே. ஜலீலிடம் நாபீர் பௌண்டஷன் தவிசாளர் பொறியியலாளர் கலாநிதி உதுமானக்கண்டு நாபிர் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்நிகழ்வில் பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் நிர்வாகிகள், வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .