2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

சம்பியனானது வொரியர்ஸ்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.என்.எம். அப்ராஸ்

கல்முனை சண்பிறைட் கழகத்தின் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், வொரியர்ஸ் சம்பியனாகியது.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏழு ஓவர்கள் கொண்ட இம்மென்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் ஹார்ட் ஹிட்டர்ஸை வென்றே வொரியர்ஸ் சம்பியனாகியிருந்தது.

இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஹார்ட் ஹிட்டர்ஸ் ஏழு ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 50 ஒட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 51 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வொரியஸ், ஏழு ஒவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து சம்பியனாகியது.

இப்போட்டியின் நாயகனாக வொரியர்ஸின் எம். அஷ்பாக் தெரிவானார்.

இவ்விரு அணிகளும், லெவிண் ஸ்பார்ட்டன்ஸ் என மூன்று அணிகள் பங்கேற்ற ஒரு அணிக்கு இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில் புள்ளிகள் அடிப்படையில் வொரியர்ஸ், ஹார்ட் ஹிட்டர்ஸ் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .