2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

கிரிக்கெட் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 28 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எச்.எம்.எம். பர்ஸான்

மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ள அதிபர் ஞாபகார்த்த கிரிக்கெட் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

1995 - 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் க.பொ.த.சாதாரண தரம் கற்ற மாணவ அணிகளைக் கொண்டு இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடரில் கலந்து கொள்ளும் அணி வீரர்களை மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்துக்கு முன்பாக இருந்து பான்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு கோலாட்டத்துடன் ஊர்வலமாக மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயம் வரை அழைத்துச் செல்லப்பட்டனார்.

இந்நிகழ்வின்போது, மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் கடமை புரிந்து மரணமடைந்த அதிபர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .