Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய பழைய மாணவர்களுக்கிடையில், நேற்று ஈஸ்டர் கோப்பை பிறீமியர் லீக் தொடரில் 2017ஆம் ஆண்டு அணி சம்பியனானது.
பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, ஏழு அணிகள் பங்கேற்ற எட்டு ஓவர்கள் இத்தொடரின் இறுதிப் போட்டியில் திறந்த அணியை வென்றே 2017ஆம் ஆண்டு அணி சம்பியனாகியிருந்தது.
இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய திறந்த அணி ஆறு ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 39 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய 2017 ஆண்டு அணி, 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்து சம்பியனானது.
வித்தியாலய முதல்வர் அருட்பணி றெபின்சன் தலைமையில் நடைபெற்ற
பரிசளிப்பு நிகழ்வில், முல்லைத்தீவு மறைக்கோட்ட குரு முதல்வரும் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தையுமான அருட்பணி அன்ரனிப்பிள்ளை அடிகளார், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உபதவிசாளர் க. ஜெனமேஜயந், முல்லைத்தீவு மாவட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரியும் சமாதான நீதவானுமான அ. சற்குணராசா, ஓய்வு நிலை உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் மைக்கல் திலகராசா உள்ளிட்ட அதிதிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் வெற்றிபெற்ற அணிகளுக்கான கிண்ணங்கள்,கேடயங்களையும் வழங்கி கௌரவித்தனர்.
பாடசாலையின் பழையமாணவர்களை ஒன்றிணைக்கும் நோக்கிலும் பாடசாலையின் வளர்ச்சி கருதியும் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா நாடுகளில் உள்ள பழைய மாணவர்களின் அனுசரணையுடன் இத்தொடர் நடைபெற்றிருந்தது.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025