Editorial / 2019 நவம்பர் 04 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு_புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்
பட்ட வள்ளிபுணம் கிராம அலுவலர் பிரிவில் இடைக்கட்டு பகுதியில் செஞ்சோலை விளையாட்டுக் கழகத்தினருக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா சுமார் ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மக்கள் பாவனைக்காக அண்மையில் கையளிக்கப்பட்டது.
இத தொடர்பான நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கலந்துகொண்டு மைதானத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்து மைதானத்தை மக்களிடம் மக்கள் பாவனைக்கு கையளித்தார்.
இளைஞர்களுக்கு இடையேயான சினேக பூர்வமான கரப்பந்துப் போட்டி ஒன்றும் இதன்போது நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
23 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
2 hours ago