2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

அம்பாரை மாவட்ட சதுரங்க சம்பியன்ஷிப் போட்டி

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எம் என்.எம்.அப்ராஸ்

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்டச் சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரும் அம்பாரை மாவட்ட சதுரங்க விளையாட்டுக்கான ஒருங்கிணைப்பாளருமான ஏ.எம்.ஸாகிர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகள் அம்பாரை மாவட்ட பாடசாலை மாணவர்க ளுக்கான சுவிஸ் முறையிலான 5 சுற்றுக்களைக் கொண்ட தொடராக  நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாக நடைபெற்றன .

7, 9, 11, 13, 15, 17 வயதிற்குட்ட ஆண், பெண் இருபாலாரு க்குமிடையிலும் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குத் தங்கம், வெள்ளி , வெண்கலப்பதக்கங் களும் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நடைபெறவுள்ள சதுரங்க போட்டி நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .