2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

வடமாகாண அணியை வாழ்த்திய அங்கஜன் எம்.பி

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.றொசாந்த்

தேசிய விளையாட்டு விழாவின்  கால்ப்பந்தாட்டப் போட்டியில்  தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்ட வடமாகாண அணியை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்  சந்தித்து  தனது வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார்.  இச்சந்திப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இல்லத்தில் நடைபெற்றது. 

பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் மின்னொளி யில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கால்ப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தென் மாகாணத்தை 4க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட வட மாகாணம் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தது.
இந்த வெற்றிக்கு    அணித் தலைவர் ஜெபமாலைநாயகம் ஞானரூபனின் தொடர்முயற்சியே பெரும் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் முதலாவது பகுதியில் தென் மாகாணத்துக்குப் பத்துக் கோணர்கள் கிடைத்தபோதிலும் அவற்றை அவ்வணி முறையாக பயன்படுத்தத் தவறியது.
இடைவேளையின் போது ஒரு கோல் முன்னிலையில் இருந்த வட மாகாண அணி இடைவேளையின் பின்னர் மேலும் 3 கோல்களைப் போட்டு இலகுவாக வெற்றிபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .