2022 ஜூலை 02, சனிக்கிழமை

பி பிரிவு கழகங்களுக்கிடையிலான போட்டிகள் ஆரம்பித்தன

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 23 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட லீக்கால் நடாத்தப்படும் பி பிரிவு கழகங்களுக்கிடையில் லீக் அடிப்படையிலான போட்டிகளின் ஆரம்பப் போட்டி, இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் பிரதிப் பொதுச் செயலாளரும், அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மருதமுனை மருதம் அணிக்கும் மருதமுனை க்ரீன் மெக்ஸ் அணிக்குமிடையிலான முதலாவது போட்டி பிரதம அதிதியால் கைலாகு செய்யப்பட்டு நினைவுப் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில் மருதமுனை மருதம் அணி 7-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இவ்வாறான போட்டி நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஊரிலும் ஏற்பாடு செய்வதானால் போதை பாவனைகளற்ற, ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை விளையாட்டுத் துறையினூடாக உருவாக்க முடியுமென தவிசாளர் எம்.ஏ. தாஹிர் இங்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .