Kogilavani / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம், கே.எஸ்.குமார்)
கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் பங்கு பற்றிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண, விளையாட்டுத்துறை பணிப்பாளர் ஐ.டி.பி.விஜேதிலக தமைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொகான் விஐயவிக்ரம கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸிஸ், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான ஆரியவத்தி கலப்பத்தி, மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 67 வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.




5 minute ago
15 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
17 minute ago