2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சீதுவை இலவன் ஸ்டார் கால்ப்பந்தாட்ட அணி வெற்றி

Kogilavani   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்


நீர்கொழும்பு பெரியமுல்ல வெஸ்டன் கால்ப்பந்தாட்ட அணிக்கும் சீதுவை இலவன் ஸ்டார் கால்ப்பந்தாட்ட அணிக்குமிடையில் நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியில் சீதுவை இலவன் ஸ்டார் கால்ப்பந்தாட்ட அணி 2:1 கோல்களினால் வெற்றிபெற்றது.


இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டு வரும் எப்.ஏ.கிண்ண கால்ப்பந்தாட்ட தொடருக்கான இவ் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை நீர்கொழும்பு கொடுவ மைதானத்தில் இடம்பெற்றது.


போட்டியின் ஏழாவது நிமிடத்திலும், 58ஆவது நிமிடத்திலும் இலவன் ஸ்டார் கால்ப்பந்தாட்ட அணி வீரர் பீ.ஏ.ஜீவந்த தனது அணிக்கான இரு கோல்களையும் பெற்றுக்கொடுத்தார்.


வெஸ்டன் கால்ப்பந்தாட்ட அணிக்காக அவ்வணியின் வீரர் ஏ.எப்.எம்.பஹாம் 56ஆவது நிமிடத்தில் தனது அணிக்கான கோலை பெற்றுக்கொடுத்தார்.


போட்டிக்கு நடுவர்களாக எஸ்.எம்.ஜிப்ரி, எம்.ஏ.எம். பஸ்ரின், எச்.ஆர்.ஹம்ருசைன் ஆகியோர் கடமையாற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .