2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

’பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மலையக மாணவர்கள் அதிகமாகவேண்டும்’

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

மலையகத்திலுள்ள சனத்தொகைக்கு ஏற்ப, வருடமொன்றுக்கு 2,000 மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குள் உள்ளீர்க்கப்படல் வேண்டும் என்றுமி அதற்கான முற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நன்னம்பிக்கை நிதியத்தின் செயலாளர் பேராசிரியர் டி. தனராஜ் தெரிவித்தார்.

கொழும்பு நன்னம்பிக்கை நிதியத்தின் ஊடாக பல்கலைக் கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, ஹட்டன் வெப்ஸ்டர் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் புலமைப்பரிசிலுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு, மலையகத்தில் இருந்து 500 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி இருந்தனர் என்றும் எனினும், இதன் மூலம் திருப்தியடைந்து விட முடியாது என்றும் அவர் கூறினார்.

நாட்டிலுள்ள நிர்வாகத் துறை, வெளிவிவகாரத் துறை போன்றவற்றை எடுத்துக் கொண்டால், விரல்விட்டு எண்ணக் கூடிய மலையகத்தைச் சேர்ந்தவர்களே  உயர்பதவிகளில் இருகின்றார்கள் என்றும் இவற்றைக் கருத்தில் கொண்டு, உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகவேண்டும் என்றும் அ வர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .