2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

நீர்வீழ்ச்சியில் விழுந்த இஸ்ரேல் இளைஞர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

எல்ல பகுதியில் அமைந்துள்ள இராவணா எல்ல நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வருகைத் தந்திருந்த இஸ்ரேல் நாட்டு இளைஞர் ஒருவர், நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்து, கடும் காயங்களுக்குள்ளாகி உள்ளார்.

இச்சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகைத் தந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞர், நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள கற்பாறையில் ஏறும் போது, வழுக்கி 10 அடி  பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதன்போது கடும் காயங்களுக்கு உள்ளான அவர், வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மொனாராகலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள அவர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .