2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

குளவிக்கொட்டால் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தனராஜா

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் மரணமானதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ள குறித்த பெண்ணுக்கு, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை – தொட்டலாகலை பகுதியில் கடந்த 29ஆம் திகதி 14 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்தனர்.

அவர்களில் ஹப்புத்தளை – பிட்டரத்மலை பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மரணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .