2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

‘கிராமத்துக்கொரு தொழில் முயற்சியாளர்’

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

“கிராமத்துக்கொரு தொழில் முயற்சியாளர்“ செயற்றிட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட காரைதீவு பிரதேச பயனாளர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு, காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் தலைமையில், காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்றது.  

நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷவின் எண்ணக்கருவில், நாடுமுழுவதும் 14,000 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது, இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை பின்பற்றி காரைதீவு பிரதேச செயலக விதாதா வள நிலைய விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் எல்.அஸ்வரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கில், காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் முயற்சியாளராவதற்குரிய தெளிவூட்டல்களை பயனாளர்களுக்கு வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .