2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Freelancer   / 2023 மே 10 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா 

மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரபர்வத்தை மெதவெலகம பகுதியில்  அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை ஆக்கரத்தனை விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்குறிப்பிட்ட சந்தேக சந்தேக நபரின் இருப்பிடத்தை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வெடிமருந்து நிரப்பி சுடும் துப்பாக்கி ஒன்று விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேக நபரையும் துப்பாக்கியையும் விஷேட அதிரடிப் படையினர் மடுல்சீமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடுல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X