2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மாணவிகளுக்கும் தாயாருக்கும் ஆசிரியர் பாலியல் தொல்லை

Freelancer   / 2022 ஜூலை 04 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகா மாநிலத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் அரசு பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவிகள் மற்றும் அவரது தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அந்த பாடசாலையின் ஆசிரியர், மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். 

இவர் மீது மேலோட்டமான முறைப்பாடுகள் வந்து கொண்டிருந்தன. எனினும், மாணவி ஒருவரின் தாயாருக்கே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

அந்த மாணவிக்கு பிரத்தியேக வகுப்புகள், அரசு உதவிகள் உள்ளிட்டவற்றை செய்து தருவதாகக் கூறி அவரின் தாயரை வற்புறுத்தி பாலியில் உறவில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அதை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.

தனக்கு ஒத்துழைக்காவிட்டால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியும் உள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் அவரின் பேச்சை கேட்காததால் அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கராடாகி பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் மீது முறைப்பாடு அளித்துள்ளார்.

 அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கையில் அவ்வாசிரியர் பல்வேறு மாணவிகளிடம் இது போன்ற பாலியல் அத்துமீறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

அந்த ஆசிரியரை கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், தலைமறைவாகியுள்ள ஆசிரியரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .