Editorial / 2021 ஜூன் 06 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில், கர்ப்பிணயும், சிறுநீரக நோயாளி ஒருவருமாக இரண்டு போர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மரணமடைந்துள்ளனர்.
அவ்விருவரது சடலங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் ஊடாக, இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்கள், பயணக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் பயணித்தவர்கள் என அறுபத்தியொரு (61) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் மற்றும் பதினேழு (17) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றன.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணி பெண்ணொருவரும் பிறைந்துரைச்சேனை அறபா வீதியை சேர்ந்த 51 வயதடைய சிறுநீரக நோயாளி ஒருவருமாக இரண்டு பேர் கொரோனா நோயினால் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்த கர்ப்பிணி பெண், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வௌ்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதே வேளை மரணமடைந்த சிறுநீரக நோயாளி நேற்றிரவு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். அதனையடுது்து இன்று காலை 11 மணியளவில் மரணமடைந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பரிசோதனைகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

13 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
49 minute ago
58 minute ago