2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பெறுபேறுகளில் மீண்டும் இறுதி இடங்களில் வடக்கு, கிழக்கு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

இம்முறை வெளியான க.பொ.த. சாதாரண தர பெறுபேற்றின் பகுப்பாய்வின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இறுதி நிலையிலிருப்பதை புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

9 மாகாணங்களின்  கிழக்கு மாகாணம் எட்டாவது 8ஆவது இடத்திலும் வடக்கு மாகாணம் 9ஆவது இடத்திலும் காணப்படுகின்றது. ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையில் முதல் நிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள இடைக்கால பெறுபேற்றின்படி, தென் மாகாணம் முதலிடத்திலும், வட மேல் மாகாணம் இரண்டாவது இடத்திலும்,மேல் மாகாணம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஊவா, மத்திய, சபரகமுவ, வடமத்திய மாகாணங்கள் முறையே 4ஆம், 5ஆம், 6ஆம் மற்றும் 7ஆம் இடங்களிலும் உள்ளன.

இதேவேளை, பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள வலய மட்ட பெறுபேறுகளின்படி, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெரும்பாலான வலயங்கள் பின்னிலையிலிருப்பதைக் காணலாம்.

எனினும், இலங்கையிலுள்ள 99 வலயங்களில் அக்கரைப்பற்று வலயம் முதல் 10 நிலைகளுள் வந்துள்ளது. அதாவது 9ஆவது இடத்தில் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .