2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

சிங்காரவத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.கிருஸ்ணா

பொகவந்தலாவை -சிங்காரவத்தை தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, நோர்வூட் பிரதேசசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவருமான  பா.சிவனேசன் தெரிவித்தார்.

குறித்த சிறுவர் பராமறிப்பு நிலையம், கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளமையினால் தொழிலுக்கு செல்லும் தாய்மார்கள்  பல்வேறு அசௌகரயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

இது தொடர்பில் தோட்ட நிவாகத்துடன் தொடர்பு கொண்டு பேசிய போது, கெரோனா தொற்று அச்சம் காரணமாக  களனி வெளி கம்பனிக்குட்பட்ட தோட்டங்களிலுள்ள அனைத்து  சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மூடுமாறு கம்பனியிலிருந்து தங்களுக்கு  அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனவே தான் ,   சிங்காரவத்தை தோட்டத்திலுள்ள சிறுவர் பராமறிப்பு நிலையத்தையும்  மூடியுள்ளோம் என நிர்வாகம் தெரிவித்தாக சிவனேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த சிறுவர் நிலையத்தை, மீண்டும் திறக்க  நடவடிக்கை எடுப்பதாக  தோட்ட நிர்வாகம்  உறுதியளித்துள்ளதாகவும்  சிவனேசன் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X