2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

ஓட்டோக்களில் கஞ்சா கடத்தல்; இருவர் கைது

Princiya Dixci   / 2021 ஜூலை 21 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், பாறுக் ஷிஹான்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் இருவேறு இடங்களில், இரு ஓட்டோக்களில் கேரளா கஞ்சா போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக ஓட்டோவில் எடுத்துச் சென்ற ஒருவரை, 1 கிலோகிராம் கஞ்சாவுடன்  நேற்று முன்தினம் (19) இரவு, இராணுவ புலனாய்வுப்  பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் ஓட்டோ இதன்போது கைப்பற்றப்பட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கேரளா கஞ்சாவை ஓட்டோவில் கடத்திச் சென்ற பிறிதொரு நபரை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட பிரிவின் தகவலுக்கமைய, காரைதீவு சந்திப்பகுதியில் வைத்து நேற்று முன்தினம் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த  43 வயதுடைய இச்சந்தேக நபரிடமிருந்தும் 1 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .