Editorial / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை, லொனெக் தோட்ட பாற்பண்ணைக்கு அருகில் இருக்கும் குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நீராட சென்றிருந்த இருவருமே இவ்வாறு இன்றுக்காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
முதலாவது சடலம் காலை 6.10க்கும் இரண்டாவது சடலம் 7 மணிக்கும் மீட்கப்பட்டுள்ளது.
இருவரில் ஒருவர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் வட்டவளை லொனெக் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்த வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
சிலாபம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கதக்க சஜிந்த தில்சான் என்பவரும் லொனெக் தோட்டத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்க தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான சின்னையா ராஜா என்பவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago