2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

பிரியங்காவை 7 வயதிலேயே ரசித்த நிக்

Ilango Bharathy   / 2023 மே 15 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை (Nick Jonas) மணந்து தற்போது ஹொலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் நிக் ஜோனாஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில் ”நான் உலக அழகி பட்டத்தை வென்றபோது எனக்கு  17 வயது. நிக் ஜோனாஸுக்கு 7 வயது. உலக அழகி போட்டி லண்டனில் நடந்தது. அப்போது எனது மாமியார், மாமனர் மற்றும் நிக் உலக அழகி போட்டியைக் காண அங்கு வருகை தந்துள்ளனர்”  இவ்வாறு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X