R.Maheshwary / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குமிடையிலான சந்திப்பு நேற்று (4) மாலை கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன், நுவரெலியாவில் அமையப்பெற்றுள்ள சீதையம்மன் கோவிலின் பிரசாதம் மற்றும் நினைவு சின்னம் என்பவற்றை இந்திய வெளிவிவகார செயலாளரிடம் கையளித்ததுடன், சீதையம்மன் கோவில் புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.
சீதைக்காக அமையப்பெற்ற உலகின் முதல் கோவில் என்ற ஸ்தானத்தை கொண்டுள்ள நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு வருகை தருவதாகவும் கோவிலின் புனரமைப்புக்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்த அவர். இந்திய வெளிவிவகார செயலாளர், அதற்கான முழுமையான ஏற்பாடுகளையும் தான் ஏற்படுத்தி தருவதாக இராதாகிருஸ்ணனிடம் உறுதியளித்துள்ளார்.
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago