2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

காஷ்மிரில் வளிக் கண்காணிப்பு நிலையம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 22 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஜம்மு காஷ்மிரானது தனது முதலாவது நிகழ்நிலை காற்றுத் தர கண்காணிப்பு நிலையத்தைப் பெற்றுள்ளது.

காஷ்மிரின் தலைநகர் ஶ்ரீநகரில் குறித்த நிலையம் திறக்கப்பட்ட நிலையிலேயே அந்நிலையத்தை காஷ்மிர் தற்போது பெற்றுள்ளது.

காஷ்மிர் மாசுக் கட்டுப்பாட்டு செயற்குழுவின் தலைவர் சுரேஷ் சுக்ஹாவாலேயே இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையமானது திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் இரண்டு மாதங்களாக சோதனையில் இருந்திருந்தது.

இந்நிலையில், ஜம்மு மாகாணத்தில் இவ்வாறான மேலும் இரண்டு நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .