R.Maheshwary / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி நகரில் ஆங்காஙகே தங்கி இருக்கும் யாசகர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை கண்டி மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
இதன் அடிப்படையில், கண்டி நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில், தங்கி இருக்கும் சுமார் 57 யாசகர்களுக்கு நேற்று (14) தடுப்பூசிகளை செலுத்த மாநகர சபையின் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்தனர்.
யாசகர்கள் மூலம் தொற்று ஏறபடும் சாத்தியம் அதிக அளவில் இருப்பதால், இந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென, கண்டி மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .