2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் விபரீதம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 16 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில்  நேற்றிரவு(15)  சிறுமியொருவர்  கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதனால் அச்சிறுமியை  மீட்கும் முயற்சியில் அக்கிராமத்தினர் ஈடுபட்டனர். இதன்போது எதிர்பாராதவிதமாக கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அதனை சூழ்ந்திருந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் போது கிணற்றிலிருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவ்விபத்தில்   4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ​


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .