2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பரிசோதனை கட்டணங்கள் மும்மடங்காக அதிகரிப்பு

R.Maheshwary   / 2022 ஜூன் 28 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

பல்வேறு நோய்கள் குறித்து அறிந்துக்கொள்வதற்காக செய்யப்படும் இரத்த மாதிரி சோதனைகள்  உள்ளிட்ட இரசாயன கூட சோதனைகளுக்கான கட்டணங்கள் 3 மடங்குகளாக அதிகரித்துள்ளன.

இதனால் வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகளை சிலர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இதுவரை நோயாளிகளின் முழுமையான இரத்த பரிசோதனைக்கு அறவிடப்பட்டு வந்த 250 ரூபாய் கட்டணம் 600 ரூபாய் தொடக்கம் 700 ரூபாய் வரை தனியார் இரசாயன கூடங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விசேடமாக டெங்கு நோயை கண்டுபிடிப்பதற்காக இரத்தமாதிரியை பரிசோதிக்குமாறு எவரேனும் வைத்தியர் ஒருவர் பரிந்துரைத்தால் தாமதிக்காமல் அந்த பரிசோதனையை செய்யுமாறு கண்டி நகர பிரதான வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த இரத்த மாதிரி பரிசோதனையை தாமதப்படுத்துவதால் நோயாளின் நிலைமையும் மோசமடையும் நிலை ஏற்படும்.

அவ்வாறான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடானது, நோயாளிக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .