2023 ஜூன் 07, புதன்கிழமை

பற்களைப் பிடுங்கும் பொலிஸாரால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 27 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 பற்களைப்  பிடுங்கி கொடுமைப்படுத்துவதாகப்  பொலிஸார்  மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நெல்லையில் இடம்பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில்,  விசாரணைக்கு அழைத்துச் செல்லும் நபர்களின் பற்களைப் பிடுங்கி பொலிஸார் கொடுமைப்படுத்துவதாகக்  குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது வெகு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சமூக  ஆர்வலர் ஒருவர், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியுடன் தொலைபேசியில், பற்களை பிடுங்கியது தொடர்பாக விளக்கம் கேட்ட உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .