R.Maheshwary / 2022 ஜூன் 27 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (27) முதல் 'டோக்கன்' முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, ஹட்டன் நகரிலுள்ள மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிபொருள் பெறுவதற்காக வருகை தந்திருந்தவர்களுக்கு ' டோக்கன்' வழங்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக ஹட்டன் பொலிஸாரால் குறிப்பு புத்தகமொன்றும் வழங்கப்பட்டுள்ளது. பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் என்பன அதன்மூலம் சேகரிக்கப்படுகின்றன.
ஒரு வாகனம் ஒரே நாளில் பல தடவைகள் எரிபொருளை பெறுவதை தடுத்தல், வரிசைகளை குறைத்தல் உள்ளிட்டவையே இந்நடவடிக்கையின் பிரதான நோக்கமென அறிவிக்கப்பட்டுள்ளது.

12 minute ago
44 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
56 minute ago