2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் நாமலின் அம்பாறை விஜயம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான், அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.என்.எம்.அப்ராஸ், ஏ. எல்.எம்.ஷினாஸ்

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் இன்றைய (13) அம்பாறை மாவட்ட விஜயத்தின் போது, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அவசரத் தேவைகள் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டார்.

பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் றிஸ்லி முஸ்தபாவின் அழைப்பின் பேரில், இங்கு விஜயம் செய்த  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகளை விரைவில் தீர்ப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க உட்பட சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி முஹம்மட் ஹாறூன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .