2022 ஜனவரி 22, சனிக்கிழமை

முத்திரை இடுதல் மும்முரம்

Editorial   / 2021 நவம்பர் 23 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் 2021/2022 அளவை நிறுவை உபகரணங்களை சரிபார்த்து முத்திரை இடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அளவீட்டு அளகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு மாவட்ட பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை வர்த்தக நிலையங்கள் மற்றும் அங்காடி வியாபார நிலையங்கள், கூட்டுறவுச சங்கம் போன்றவற்றில் உள்ள நிறுக்கும், அளக்கும் உபகரணங்கள் பரிசோதனை செய்யப்பட்டு நாளை (24) முதல் 26ஆம் திகதி வரை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் காலை 09.30 மணி தொடக்கம் 03.30 மணி வரை முத்திரை இடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

29ஆம் திகதி ஒலுவில் வாசிக சாலையில் 09.30 மணி தொடக்கம் மாலை 03.30 மணி வரை முத்திரை இடும் பணி நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அளவை நிறுவை உபகரணங்களுக்கு சரிபார்த்து முத்திரையிட தவறுபவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடிவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X