2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம்

Freelancer   / 2023 மே 10 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் புகையிரதத்தில் பயணஞ் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையக பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களின் கதவுகள் யாவும் பூட்டப்பட்டு இருந்ததுடன், பயணிகள் ஓய்வு அறை, உணவகம் உட்பட அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரி ஒருவருக்கு பிரதிப் பொது முகாமையாளர் நியமனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

நிலைய பொறுப்பதிகாரிகளின் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்காக மலையக பஸ்தரிப்பு நிலையங்களில் பல தனியார் மற்றும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .