2022 மே 20, வெள்ளிக்கிழமை

கும்பலாக வரும் சிறுத்தைகளால் அச்சம்

R.Maheshwary   / 2022 ஜனவரி 17 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்‌ஷ

சிறுத்தைக் குடும்பம் ஒன்று, பகலிலும் இரவிலும் இரைத் தேடி, தொடர்ச்சியாக தமது குடியிருப்பு பகுதிகளுக்கு வருகைத் தருவதாக கொட்டகலை  பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொமர்ஷல் மற்றும் சமகிபுரம் ஆகிய பகுதிகளுக்கே குறித்த சிறுத்தைகள் வந்து செல்வதாகவும் இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் வசிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரதேசங்களுக்கு அருகில் உள்ள குடாகம பகுதியில் அமைந்துள்ள சிறிய பற்றைக்காடு மற்றும் அதற்கு அருகிலுள்ள கற்குகை பகுதிகளில் இந்த சிறுத்தைகள் வசிப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மக்கள் குடியிருப்பு வரும் சிறுத்தைகள், கால்நடைகள் மற்றும் நாய்களை வேட்டையாடிச் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த இரண்டு பிரதேசங்களுக்குமான குடிநீர், குடாகம பற்றைக்காடு பகுதியிலிருந்தே விநியோகிக்கப்படுவதுடன், அந்த நீர்க்குழாய்களை பழுதுபார்க்க முடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறித்த சிறுத்தைகளைப் பிடித்து, வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரி்க்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .