2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

திருமணம் செய்த 3ஆம் நாள் புதுமாப்பிள்ளைக்கு பூட்டு

Editorial   / 2022 ஜூன் 28 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணொருவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு   தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக   ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பெண்ணிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அதே நிறுவனத்தில் பணியாற்றும் 26 வயதானவரை, அப் பெண் 9 மாதமாக காதலித்து வந்துள்ளனர்.   திருமண ஆசை காட்டிய அந்நபர், பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

 இந்தநிலையில் கடந்த 15 ஆம் திகதி கடலூரை சேர்ந்த மற்றொரு பெண்ணை அந்நபர் திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

 இதையடுத்து   திருமணமான 3-வது நாளில்  அவரது வீட்டுக்கே சென்ற பொலிஸார், புது​மாப்பிள்ளையை கைதுசெய்து. மத்திய சிறையில் அடைத்தனர்.  இந்த சம்பவத்தால் மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .