2023 மே 30, செவ்வாய்க்கிழமை

பாராட்டு விழா

Freelancer   / 2023 மார்ச் 28 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வத்தேகம கல்வி வலய, பன்வில கல்விக் கோட்ட மாவுசா தமிழ் வித்தியாலய மாணவிகள் இருவர் வரலாற்றில் முதல் தடவையாக சித்தி பெற்றுள்ளனர்.

தியாகராஜா சதுர்ஷா 158 புள்ளிகளைப் பெற்றும் காளிதாஸ் கிரியக்சனா 146 புள்ளிகளைப் பெற்றும் பாடசாலையில் வரலாறு படைத்துள்ளனர்.

கஷ்டப் பிரதேச பாடசாலையில் இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா  பாடசாலை அதிபர் சண்முகம் கிருஷ்ணகுமார் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இதில், வத்தேகம கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி W.M.தரங்கா குணரட்ண பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்தார்.

அதிபருக்கும் வகுப்பாசிரியையான திருமதி பி ஜீவனா உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பெற்றோர்கள் தமது பாராட்டுகளை தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .