2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

’உயிரைக் காவுகொள்ளும் காதல்’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 20 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிருஷ்ணகிரி :

இன்று உலகில் காதலர்களின் அன்பின் உச்சத்தாலும் குடும்பத்தின் கௌரவத்தின் பிரதிபலிப்பினாலும் காதல் காவுகொள்ளல்கள்  அதிகரித்துக் கொண்டு செல்வதால்,பாவங்கள் மேலோங்குகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த மிண்டிகிரி கிராமத்தில் பெரும் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை மனதை கஷ்டப்படுத்துகின்றது.  வான் சாரதியொருவரின் குடும்பத்தில் இவரது மனைவி மற்றும் காதலித்த மகள் ஆகியோர் மரணித்த சம்பவம் பெரும் கவலையைத் தோன்றுவிக்கிறது.  தனது மகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி  திருமணம் செய்ய குடும்பத்தார்  முடிவு செய்துள்ளனர். பிரியாவோ, அதே கிராமத்தைச் சேர்ந்த  வாலிபரை காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த தாய், நேற்று முன்தினம் பிரியாவை கண்டித்துள்ளார். இதை, காதலனுக்கு தொலைபேசியில்  தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் நேற்று இரவு, அவரவர் வீட்டில் பூச்சி மருந்து குடித்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.

 

 மகளின் நடவடிக்கையால் மனமுடைந்த தாய்  நள்ளிரவில் இளைய மகள் மற்றும், மகன்   ஆகியோருடன் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து உள்ளார். மகன் நீச்சல் தெரியாமல் தத்தளித்தபோது, அவரை தாய் நீரில் அழுத்தியதில், மூச்சுத் திணறி இறந்தார் மகன்.அதேவேளை மகளையும்   நீரில் அழுத்தியபோது, மோட்டார் பைப்பைமகள்  இறுகப் பிடித்துத் தப்பித்துக் கொண்டார்.   

 

அப்போது மயக்கமடைந்த தாய்  நீரில் மூழ்கினார்.  அதிகாலைமகளின்  அளுகைச் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து, போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் உதவியோடு அவரை மீட்டனர். தாயையும்  மற்றும் மகனையும்  சடலமாக மீட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .