Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 26 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளையிலும் கல்முனைப்பிரதேசத்தில் தமிழர் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக நேற்று முன்தினம் (25) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவணையில் உள்ள காணியொன்றை சிலர் தமது காணி எனக் கூறி அதனை அளந்து எல்லையிட முயற்சி செய்ததாகவும், இதன்போது அங்கு அப்பகுதி மக்கள் மற்றும் கிராம சேவையாளர் வரவே காணி அளக்க வந்த குழுவினர் அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் ” கொரோனாத் தொற்றுக் காரணமாக மக்கள் முடங்கியுள்ள நிலையிலும் காணிகளை எவ்விதமான அறிவிப்பும் இன்றி அளக்க வந்தமை சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச காணிகள் தனியார்மயப்படுத்தப்படுகின்றன.
இதனைத் தடுக்க பொதுக்கட்டமைப்பு அவசியம். அத்துடன் இவ்வாறு சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ” எனத்தெரிவித்தார்.
13 minute ago
36 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago
51 minute ago
2 hours ago