R.Maheshwary / 2021 நவம்பர் 28 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
கண்டி- குருதெனிய பிரதான வீதியில் நேற்று இரவு (27 ) பயணித்தக்கொண்டிருந்த காரொன்று 11 மணியளவில் இலுக்மோதர பகுதியிலுள்ள மகாவலி ஆற்றுக்குள் விழுந்ததால், காணாமல் போன நபர் இன்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கார் விபத்துக்குள்ளான போது, இதன்போது சாரதியும் மற்றுமொருவரும் பாய்ந்து உயிர் தப்பியுள்ளதுடன், ஒருவரே காணாமல் போயிருந்தார்.
.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபரும் சாரதியும் குருதெனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மற்றைய நபர் இரத்தினபுரியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இரவு இடம்பெற்ற போதிலும் அதிகாலை வரை எவருக்கும் அறிவிக்காமல் மறைத்த குற்றச்சாட்டில் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago