Editorial / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
வரலாற்று சிறப்பு மிக்க, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மஹோற்சவ தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.
அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்றது. முன்னதாக ஆறுமுக சாமி மஞ்சள் அலங்காரத்தில் உள்வீதி உலா வந்தார்.
அதனை தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி , தெய்வானை சமேதரராய் , சிறிய தேரில் ஆரோகணித்து , உள்வீதியுலா வந்தார்.
கொரோனோ பெருந்தொற்று காரணமாக இம்முறை ஆலய வருடாந்த மஹோற்சவம் பக்தர்களின் பங்கேற்பின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் இடம்பெற்றது.
அதனால், இம்முறை தேர் திருவிழாவின் போது தேர் இழுக்காது , வேல் பெருமான், வள்ளி , தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் ஆரோகணித்து அருள்காட்சி அளித்தார்.




21 minute ago
23 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
23 minute ago
50 minute ago